ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் தேதி மாற்றம் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தாண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடரின் தேதி மார்ச் 29 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக பிசிசிஐ  தெரிவித்துள்ளது.


Advertisement

13-ஆவது ஐபிஎல் டி20 தொடர் இம்மாதம் 29-ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுவது உறுதியாகி இருந்தது. இப்போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சிஎஸ்கே கேப்டன் தோனி உள்ளிட்ட வீரர்கள் ஏற்கெனவே பயிற்சிகளை தொடங்கிவிட்டனர்.


Advertisement

ஆஸி., வீரர் கேன் ரிச்சர்ட்சனுக்கு கொரோனா பாதிப்பு? 

image

இந்நிலையில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டுமென்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரை குறிப்பிட்ட தேதியிலேயே நடத்தலாமா? அல்லது ஒத்திவைக்கலாமா என்பது குறித்து நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகக்குழு தெரிவித்திருந்தது.


Advertisement

image

டெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை: துணை முதல்வர் தகவல் 

இதனையடுத்து இக்கூட்டத்துக்கு ஐபிஎல் அணியின் உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement