JUST IN

"அடுத்த படத்தின் கதை தயார்" ட்விட்டரில் செல்வராகவன் தகவல் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தன்னுடைய அடுத்தப்படத்துக்கான கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வருவதாக இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் என்.ஜி.கே. இப்படத்தில் சூர்யா, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கலவையான விமர்சனம் பெற்ற இப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெறவில்லை. மேலும், செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள "நெஞ்சம் மறப்பதில்லை" படம், பணச்சிக்கல் காரணமாக இன்னும் வெளியாகவில்லை.

image

இதனால் தன்னுடைய அடுத்தடுத்த கதை தயாரிப்பு பணிகளில் செல்வராகவன் ஈடுபட்டுள்ளார். செல்வராகவன் அடுத்ததாக தன்னுடைய தம்பி தனுஷை வைத்தே படம் இயக்கப் போகிறார் என்ற செய்தியும் வெளியானது. இவர்கள் இருவரின் கூட்டணியில் ஏற்கெனவே வெளிவந்த ‘புதுப்பேட்டை’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

“சிங்கத்தை பிடித்து சென்றுவிட்டாயே..” : மதுரையில் எமதர்மனுக்கு கண்டன போஸ்டர்..! 

image

தனுஷ் இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் "கர்ணன்" திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்து தனுஷ் தனது அண்ணனின் இயக்கத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து இருவரும் எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் "வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை2’எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ எடுக்க வேண்டும் என்பதுதான். சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்” எனத் தெரிவித்திருந்தார்.

இப்போது செல்வராகவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வருவதாக புகைப்படம் வெளியிட்டுள்ளார். அது புதுப்பேட்டை 2வுக்கா அல்லது ஆயிரத்தில் ஒருவன் 2 வுக்கா என தெரியவில்லை. ஆனால் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் குமார் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. புதுப்பேட்டை படத்தில்தான் தனுஷின் கதாப்பாத்திரத்தின் பெயர் "கொக்கி" குமார். ஒருவேளை செல்வராகவன் புதுப்பேட்டை 2, படத்துக்கான திரைக்கதை வடிவமைப்பில் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறார் என்று ரசிகர்கள் அவதானித்துள்ளனர்.

Advertisement: