JUST IN

Advertisement

TopNews | ட்ரம்ப் பேட்டி... டெல்லி வன்முறை... இன்னும் சில முக்கியச் செய்திகள்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா புறப்பட்டார் அதிபர் ட்ரம்ப். குடியரசுத் தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு
 
குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என ட்ரம்ப் பேட்டி.  மதச் சுதந்திரத்திற்கு மோடி ஆத‌ரவாக இருப்பதாகவும் கருத்து
 
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்தத் தயார். எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த கேள்விக்கு ட்ரம்ப் பதில்
image
 
21ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்குவதாக ட்ரம்ப் அறிவிப்பு. அமெரிக்காவில் முதலீடு செய்ய வருமாறு இந்திய தொழிலதிபர்களுக்கு அழைப்பு
 
ட்ரம்புடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக முக்கியமான பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி தகவல். விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும் பேட்டி
 
டெல்லியில் குடியுரிமை திருத்தம் தொடர்பான மோதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு. வன்முறை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நள்ளிரவில் ஆய்வு
image
 
மாநிலங்களவை எம்.பி.க்கள் திருச்சி சிவா, டி.கே.ரங்கராஜன், சசிகலா புஷ்பா உள்ளிட்ட 6 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் நிறைவு. காலியாகும் இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement