அன்பாக கேட்ட விஜய்.. பாசமாக தன் பாணியில் முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் நட்பு ரீதியில் அன்பை வெளிப்படுத்தும் விதமாக விஜயைக் கட்டிப்பிடித்து நடிகர் விஜய் சேதுபதி தன் பாணியில் முத்தம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

விஜயுடன் முதன்முறையாக விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. தற்போது இவர் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இதில் அவர் வில்லனாக நடித்து வருகிறார். இப்போது, இப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இப் படத்தின் கலை இயக்குநர் சதீஷ்குமாரின் பிறந்த தினத்தை ‘மாஸ்டர்’ குழு செட்டில் கொண்டாடியுள்ளது.

image


Advertisement

மேலும், இந்த நிகழ்வில் நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது கலை இயக்குனர் சதீஷ்குமாரை தனது வழக்கமான பாணியில் கட்டிப்பிடித்து விஜய் சேதுபதி முத்தமிட்டுள்ளார்.

நாளை தொடங்குகிறது ‘மாநாடு’ படப்பிடிப்பு - உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்..!

அங்கே இருந்து விஜய் தனக்கு முன்னால் நடந்து கொண்டிருந்த சகல இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத திருப்பமாக விஜய், விளையாட்டாக தனக்கும் ஒரு முத்தம் கேட்டுள்ளார். எல்லோருக்கும் ஆச்சர்யம் அளிக்கும்படி விஜய் சேதுபதி திடீரென விஜயைக் கட்டிப்பிடித்து, அவரது இரு கன்னங்களிலும் முத்தம் கொடுத்துள்ளார்.


Advertisement

image

இதனைக் கண்ட ஒட்டுமொத்த அணியும் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளது. மேலும் மகிழ்ச்சியில் உச்சத்தில் சத்தம் போட்டுள்ளனர். ஆனால் இது குறித்த எந்தப் புகைப்படங்களும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிகழ்ச்சியில், பங்கேற்ற யாரேனும் படங்கள் அல்லது வீடியோக்களை ஏதேனும் எடுத்து முடித்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

“ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டுகிறார் விசு” - நெற்றிக்கண் ரீமேக் சர்ச்சை குறித்து ’கவிதாலயா’

விரைவில் அதற்கான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. நாம் எதிர்பார்ப்பதை போல வீடியோ அல்லது புகைப்படம் வெளியானால் அது நெய்வேலியில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்ஃபி போலவே இதுவும் வைரலாகும் என்பது மட்டும் நிச்சயம். 

loading...

Advertisement

Advertisement

Advertisement