JUST IN

Advertisement

விஜய் இல்லாமலே மீண்டும் தொடங்கிய 'மாஸ்டர்' படப்பிடிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து வந்தது. இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு பணி நேற்று நெய்வேலி சுரங்கத்திற்குள் நடந்து கொண்டிருந்தது.


Advertisement

image

அப்போது, படப்பிடிப்பு தளத்திற்கு வந்த வருமான வரித்துறையினர் ’பிகில் படத்தில் நடித்ததற்காக விஜய் பெற்ற சம்பளம் குறித்து விசாரிக்க வேண்டும்’ என சம்மன் கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள், பின்னர் நடிகர் விஜயை படப்பிடிப்பு தளத்தில் இருந்து காரில் அழைத்துச் சென்றனர். இதனால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.


Advertisement

தற்போது, விஜய் இல்லாத நிலையில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயை தவிர்த்து மற்ற நடிகர்கள் பங்கு பெறும் காட்சிகள், குறிப்பாக நடிகை மாளவிகா மோகனன் இடம் பெறும் காட்சிகள் இன்று எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் இல்லாத நிலையிலும், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தடையில்லாமல் மீண்டும் தொடங்கியுள்ளது.

 

Related Tags : mastervijayIT ride
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement