JUST IN
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

கோரிக்கையை உடனே நிறைவேற்றிய ஆட்சியர் - ஆனந்த கண்ணீருடன் சென்ற மாற்றுத்திறனாளி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிவகங்கையில் கால்களை இழந்து தவித்து வந்த நபரின் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் உடனே நிறைவேற்றினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அரணிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (35). இவர் மின்பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு ஒரு வீட்டில் மின்பழுதினை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென மின்சாரம் தாக்கி சுரேஷ் படுகாயமடைந்தார். உடனடியாக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் இரண்டு கால்களும் அகற்றப்பட வேண்டிய சூழ்நிலை உருவானது. வேறு வழியின்றி சுரேஷின் இரண்டு கால்களையும் மருத்துவர்கள் அகற்றினர்.

“தயவுசெய்து மீண்டும் பள்ளிக்கு செல்லுங்கள்”- மேடையிலேயே கண்கலங்கிய சூர்யா..!

இதனால் சுரேஷ் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்த அவரது குடும்பம் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் திணறியது. சுரேஷின் மனைவி லட்சுமி 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் பெற்ற வரும் சம்பளத்தை கொண்டு, குடும்பத்தை பசியின் கொடுமையில் இருந்து மீட்டு வந்தார். இந்நிலையில் சுரேஷும் அவரது மனைவியும், மூன்று குழந்தைகளுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம், தனக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து மனு அளித்தார்.

இந்த மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் உடனடியாக சுரேஷிற்கு மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை மற்றும் மூன்று சக்கர வாகனத்தை வழங்கினார். மேலும் சுரேஷின் தொழிலுக்காக வங்கியில் கடன் உதவி பெற்றுக் கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தன்னுடைய கோரிக்கை உடனடியாக நிறைவேறும் என்று எதிர்பாராமல் வந்த சுரேஷ் கண்களில் ஆனந்த கண்ணீர மல்க மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து சென்றார்.

Advertisement: