JUST IN
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

'பொன்னியின் செல்வன்' நாவலில் மூழ்கிய த்ரிஷா - இன்ஸ்டாவில் தகவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

‘பொன்னியின் செல்வன்’ நாவலை படிக்க தொடங்கி இருப்பதாக த்ரிஷா அவரது இன்ஸ்டா மூலம் தகவல் கொண்டுத்துள்ளர்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டு டிசம்பரில் அதிகாரப்பூர்வமான செய்தி வெளியானது. மேலும் இதில் கார்த்தி, ஜெயம் ரவி, ரியாஸ் கான், மோகன் ராமன் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி போன்ற திரை நட்சத்திரங்களும் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தப் படக்குழுவினர் தாய்லாந்தில் முதற்கட்ட படப்பிடிப்பில் மும்முரமாக மூழ்கி உள்ளனர்.

image

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பில் த்ரிஷா இணைய இருப்பதாக தெரியவந்துள்ளது. இவருக்கு முன்பே நடிகர் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் விரைவில் படப்பிடிப்பில் இணைவார்கள் என்று ஏற்கனவே செய்தி வெளியானது. ஆகவே தனக்கான கதாபாத்திரத்தை சிறப்புற செய்ய வேண்டி த்ரிஷா, எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தீவிரமாக படிக்கத் தொடங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கு தக்க அவர் தனது இன்ஸ்டாவில் ‘பொன்னியின் செல்வன்’ தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பையும் புத்தக அட்டையை ஸ்டோரி ஆக வைத்துள்ளார். இதற்கு முன்பாக மணிரத்னம் இயக்கிய, ‘ஆயுத எழுத்து’ படத்தில் த்ரிஷா நடித்திருந்தார். இரண்டாவது முறையாக இவர் மீண்டும் இவருடன் இணைந்துள்ளார்.

Image result for ponniyin selvan

‘பொன்னியின் செல்வன்’ தமிழில் எழுதப்பட்ட ஒரு அசாதாரணமான நாவலாகும். இதனை பிரபல எழுத்தாளர் கல்கி எழுதி இருந்தார். இன்றளவும் தமிழ் புதினங்களில் அமோக விற்பனையாகும் நூலாக இது இருந்து வருகிறது. அதை மையமாக வைத்தே இந்தப் படத்தினை மணிரத்னம் இயக்கி வருகிறார். இதனை லைகா புரடெக்‌ஷன் தயாரித்து வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் படத்திற்கு இசையமைத்து வருகிறார். தோட்டா தரணி மற்றும் வாசிக் கான் ஆகிய இருவரும் இதற்கு கலை இயக்குநர்களாக பணியாற்றி வருகின்றனர். பிருந்தா, படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். 

Advertisement: