ஓசூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி சித்ரவதை செய்து ரூ.11 லட்சம் பறித்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சத்தியமூர்த்தி. இவரிடம் நிலம் வாங்குவதற்கு முன்பணம் கொடுப்பதாக கூறி, சேலத்தை சேர்ந்த கும்பல் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களின் பேச்சை நம்பி கடந்த 12ஆம் தேதி சேலம் வந்த சத்தியமூர்த்தியை, அந்த கும்பல் கடத்தியுள்ளது. அத்துடன் பணம் கேட்டு மிரட்டி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் ரூ.11 லட்சத்தை அவரிடம் இருந்து பறித்த அக்கும்பல், போலீசாரிடம் புகார் கொடுத்தால் கொன்றுவிடுவோம் என மிரட்டிவிட்டு, கடந்த 15ஆம் தேதி சத்தியமூர்த்தியை விடுவித்துள்ளது. இதையடுத்து ஓசூர் திரும்பிய சத்தியமூர்த்தியை, அவரது குடும்பத்தினர் புகார் கொடுக்க வற்புறுத்தியுள்ளனர்.
அதன்படி, தன்னை கடத்தி பணம் பறித்த கும்பல் தொடர்பாக கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் நேற்று சத்தியமூர்த்தி புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த சாஹித், முருகபாண்டியன், கோபால் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
Loading More post
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
அமமக கூட்டணியில் ஓவைசியின் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை