JUST IN
  • BREAKING-NEWS ‌கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிர்பயா குற்றவாளி தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை
  • BREAKING-NEWS ‌தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த தடைகோரி உயர்நீதிமன்றக் மதுரை கிளையில் புதிய மனு
  • BREAKING-NEWS ‌எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
[X] Close

“துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்” - ரஜினிகாந்த்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முரசொலி வைத்திருந்தால் திமுகக்காரர் என்பார்கள்; துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். வெங்கையா நாயுடு வெளியிட்ட சிறப்பு மலரை ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

image

பின்னர், பேசிய ரஜினி, “முரசொலி வைத்திருந்தால் திமுகக்காரர் என்பார்கள்; துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள். சோ ராமசாமியையும், துக்ளக் பத்திரிகையையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்கள் இருவர்; ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றொருவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. சோவை போலவே துக்ளக் இதழை கொண்டு செல்கிறார் குருமூர்த்தி” என்றார்.

Advertisement:
[X] Close