[X] Close >

‘வெள்ளைச் சட்டை’ அணிந்து விநோத மோசடி - சிக்க வைத்த சிசிடிவி

Police-identify-CCTV-footage-of-burglars-wearing-white-shirt

மளிகைக் கடையில் பொருள் வாங்குவதைபோல் பெண்ணின் கவனத்தை திசைத்திருப்பி ஒரு கும்பல் பணத்தை பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Advertisement

image

பர்வீனா பானு என்பவர் சென்னை அருகே மாங்காட்டில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வெள்ளைச் சட்டை அணிந்து வந்தவர் பொருள்களை வாங்கிக் கொண்டிருக்கும் போது மற்றொரு நபர் அதேபோன்று வெள்ளைச் சட்டை அணிந்தபடி அங்கு வருகிறார். இரண்டாவதாக வந்தவர் முதலில் நபரிடம் 500 ரூபாயை கடையில் இருப்பவர்களுக்கு தெரியாத வண்ணம் கொடுக்கிறார். அதை வாங்கிக் கொண்ட முதல் நபர் கடை உரிமையாளரிடம் கொடுத்து மீதியைப் பெறுகிறார்.


Advertisement

அந்த நேரத்தில் தான் வாங்கிய பொருளுக்கு பணம் கொடுப்பது போல் இரண்டாவதாக வந்தவர் ரூபாய் நோட்டை நீட்டுகிறார். பர்வீனா பானு அதை வாங்க முயலும் போது முதல் நபர் தமக்கு வழங்கப்பட்ட ரூபாய் நோட்டில் ஒன்று கிழிந்திருப்பதாகக்கூறி அவரது கவனத்தை திசைத்திருப்புகிறார். அதைப் பயன்படுத்தி இரண்டாவது நபர் பணமே கொடுக்காமல் பொருளையும் மீதியையும் வாங்கிக் கொள்கிறார்.

image

இதற்கிடையே மூன்றாவதாக வெள்ளைச் சட்டை அணிந்து வரும் மற்றொருவர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை கொடுப்பது போல் நடித்து கொடுக்காமல் ஏமாற்றி பொருளையும் பாக்கியையும் பெற்றுக் கொள்கிறார். அதே முறையில் மற்றொரு வெள்ளைச் சட்டை அணிந்த நபரும் பர்வீனா பானுவை ஏமாற்றுகிறார்.


Advertisement

மளிகைக் கடை உரிமையாளரின் கவனத்தை திசைத்திருப்பி மோசடி செய்த 4 பேரும் பணம் மற்றும் பொருள்களுடன் தப்பிச் சென்றுவிட்டனர். பர்வீனா பானுவுக்கு சந்தேகம் வராமல் இருக்கவும் அவரை குழப்பவும் 4 பேரும் ஒரே மாதிரி வெள்ளைச் சட்டையை அணிந்து வந்து மோசடியில் ஈடுபட்டுள்ளது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close