JUST IN

Advertisement

கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீ - வரலாறு காணாத பாதிப்பை சந்திக்கும் ஆஸ்திரேலியா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கட்டுக்கடங்கா‌மல் எரிந்து வரும் காட்டுத்தீயால் வரலாறு காணாத பாதிப்பை ஆஸ்திரேலியா சந்தித்து வருகிறது. இதனால் சுற்றுச்சூழலை பாதுகாக்க உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டுமென்ற குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.


Advertisement

ஆஸ்திரேலியாவில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி ‌மாதம் வரை‌ நிலவும் கோடைக்காலத்தில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம்தான். ஆனால், இம்முறையோ வரலாறு காணாத சேதங்களை காட்டுத்தீ ஏற்படுத்தி வருகிறது.

நியூ சவுத் வேல்ஸ் ‌மாகாணத்தில் பற்றிய காட்டுத் தீ, கண்டம் முழுவதும் பரவி இயற்கையின் கொடை‌‌யான ‌காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறது. காட்டுத் தீக்கு, இதுவரை 15 மில்லியன் ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இது பெல்ஜியம் நாட்டின் பரப்பளவில் இரண்டு மடக்கு ஆகும். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்த நிலையில், கணக்கில் அடங்கா மதிப்பிலான சேதங்களை காட்டுத்தீவு ஏற்படுத்தி இருக்கிறது.


Advertisement

image

ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படும் உயிரினங்கள் உள்பட 50 கோடி விலங்குகள் துடித்துடித்து இறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காட்டுத்தீயை கட்டுப்படுத்த அல்லும் பகலும் அயராது ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்களும், தன்னார்வ தொண்டர்களும் ஈடுபட்டு உள்ளனர். ஆஸ்திரேலியாவில் கொழுந்து விட்டு எரியும் தீயால்‌ ஏற்பட்ட புகை, ‌நியூசிலாந்து வரை பரவியுள்ளது. வானம் முழுவதும் புகை மேகங்கள் காணப்படும் நிலையில், அபாயகரமான காற்றை அங்குள்ள ‌மக்கள் சுவாசித்து கொண்டு இருக்கிறார்கள்.

கொடும் காட்டுத்தீக்கு, பருவநிலை மாற்றம் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், ஆஸ்திரேலிய அரசும், சூழலியலாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய தவறியது மற்றொரு கா‌ரணமாக பார்க்கப்படுகிறது.


Advertisement

image

ஆஸ்திரேலியாவை வாட்டி வரும் காட்டுத்தீ, சுற்றுச்சூழலைப் பே‌ண வேண்டிய கட்டாயத்தை உலக நாடுகளுக்கு உணர்த்தி இருக்கிறது. பூமியின் வளத்தை வருங்காலத்திற்கு அப்படியே கடத்திக் கொடுக்கும் கடமை, நம் அனைவருக்குமே உள்ளது என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்தாக இருக்கிறது.‌

மேடையில் பேசிய மாணவியின் உரையைக் கேட்டு கண்ணீர்விட்டு அழுத சூர்யா - வீடியோ!

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement