தேர்தல் மோதல் - தூத்துக்குடியில் ஒருவர் வெட்டிக்கொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தூத்துக்குடியில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிக்கு அருகே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.


Advertisement

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றியத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு லதா மாசான சாமி என்பவரும், இளையராஜா என்பவரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் மேட்டூர் வாக்குச்சாவடி அருகே இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

"சிஏஏ யாருடைய குடியுரிமையையும் பறிக்காது" பிரதமர் மோடி

லதா மாசானசாமியின் கணவர், அவரது உறவினர்கள் சண்முக சுந்தரம், மாரியப்பன் ஆகியோரை இளையராஜா தரப்பினர் அரிவாளால் வெட்டினர். இதில் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement