அரியலூர் மாவட்டத்தில் 2 குழந்தைகளின் தாய், மின்வாரியத்தில் வயர் மேன் பணிக்கு தேர்வாகியுள்ளார்.
கம்பத்தில் விறுவிறுப்பாக ஏறும் இவர் 36 வயதாகும் பெண்ணரசி. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தஞ்சையில் நடைபெற்ற வயர்மேன் பணிக்கான உடல் தகுதி தேர்வில் முதல் வகுப்பில் பெண்ணரசி தேர்ச்சி பெற்றார். 22 பெண்கள் பங்கேற்ற போட்டியில், விதிக்கப்பட்ட இலக்குகளை குறுகிய நேரத்தில் நிறைவு செய்த பெண்ணரசி, வயர்மேன் பணிக்கு தேர்வானார்.