[X] Close >

விஜயின் ‘தளபதி 64’ படத்தில் இணைந்த ‘கைதி’ நடிகர்

This-Kaithi-actor-is-also-acting-in-Thalapathy-64-

விஜயின் ‘தளபதி 64’ படத்தில் இளம் நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.


Advertisement

நடிகர் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு அசுர வேகம் எடுத்துள்ளது. இதுவரை இரண்டு கட்டங்களுக்கான படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. சில வாரங்கள் முன்பு சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய் பங்கேற்ற பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.


Advertisement

இந்நிலையில் இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக கர்நாடக மாநிலம் ஹிமோகாவில் பெரிய சிறைச்சாலை ஒன்று செட் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில்தான் விஜய் சேதுபதிக்கும் விஜய்க்குமான சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. சமீபத்தில்தான் இந்த மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் விஜய்சேதுபதி பங்கேற்றதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படத்தயாரிப்பு நிறுவனம் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

இதனிடையே ஏற்கெனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ படத்தில் நடித்திருந்த நடிகர் லல்லு, ‘தளபதி 64’ படத்தில் இணைந்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் விஜயுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை லல்லு பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகர் லல்லு, முன்பே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான விஜயின் ‘சர்கார்’ படத்தில் நடித்திருந்தார். மேலும் ‘8 தோட்டாக்கள்’, ‘ரங்கூன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Image result for thalapathy 64


Advertisement

இப்படத்தில் முக்கிய வேடத்தில் மாளவிகா மோகன் நடித்து வருகிறார். இதில் கல்விமுறைக்குள் நடக்கும் ஊழலை எதிர்க்கும் கல்லூரி பேராசிரியர் வேடத்தில் விஜய் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு பாக்யராஜ், ஸ்ரீமன், ஸ்ரீநாத் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ இதனை தயாரிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close