சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கும் பணி தொடங்கியது!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தீ விபத்தால் ஸ்திரத்தன்மையை இழந்த சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியது.


Advertisement

இன்று அதிகாலை தொடங்கவிருந்த இடிக்கும் பணி தள்ளிப்போடப்பட்டது. ஆனால், அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. குவிந்துவரும் கட்டட இடிபாடுகளை அகற்றுவதற்கு நேரம் பிடிப்பதால், இடிக்கும் பணி தள்ளிப்போனதாகக் கூறப்படுகிறது.

இடிபாடுகள் லாரிகள் மூலம் தொடர்ந்து அப்புறப்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கட்டடத்தை இடிக்கும் பணி சற்று நேரத்துக்கு முன் தொடங்கியது. இதற்காக பிரத்யேகக் கருவி வரவழைக்கப்பட்டுள்ளது. இடிக்கும் பணியைக் கருத்தில் கொண்டு, சென்னை சில்க்ஸ் கடையின் சுற்றுப்பகுதியில் வசித்து வருவோர் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்டனர். தி.நகர் பகுதியில் போக்குவரத்தும் மாற்றப்பட்டுள்ளது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement