மணப்பாறை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நகலகம் உரிமையாளரை போலீஸார் போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கோவில்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 900 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவியர்களுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவின்பேரில் வெள்ளிக்கிழமை பள்ளியில் மாணவியர்களிடம் ஆசிரியைகள் ரகசியமாக பாலியல் தொல்லை அளித்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பள்ளியின் அருகில் நகலகம் வைத்து நடத்தி வரும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சண்முகசுந்தரம்(52) என்பவர், நகல் எடுக்க செல்லும் மாணவியர்களிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அஜிமா நேற்று பள்ளிக்கு நேரில் சென்று மாணவியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, பள்ளியின் தலைமையாசிரியர் ஸ்ரீதரன் அளித்த புகாரின்பேரில் வளநாடு போலீஸார் சண்முக சுந்தரத்தை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?