வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது ரிசாட் செயற்கைக்கோள் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் 50-ஆவது ராக்கெட்டான பி‌.எஸ்.எல்.வி. சி 48 மூலம் விண்ணில் ஏவப்பட்ட ரிசாட் 2பிஆர் 1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. 


Advertisement

Image

நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக ரீசாட் 2பிஆர் 1 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. 628 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1-ஆவது ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி சி 48 என்ற ராக்கெட் மூலம் இன்று மாலை 3.25 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.  


Advertisement

Image

இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா 1 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள் இந்த ராக்கெட்டில் வைத்து அனுப்பப்பட்டுள்ளன. விண்ணில் ஏவப்பட்ட 16 நிமிடங்களிலேயே பி.எஸ்.எல்.வி சி 48 ராக்கெட்டிலிருந்து ரீசாட் 2பிஆர் 1 செயற்கைக்கோள் பிரிந்து, பூமியிலிருந்து 576 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை வெளிநாடுகளை சேர்ந்த 130 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாய்ந்த 75 ஆவது ராக்கெட்டாகும்.

loading...

Advertisement

Advertisement

Advertisement