2 கோடி கார்கள் விற்பனை - புதிய மைல்கல்லை எட்டிய மாருதி சுசுகி!

Maruti-Suzuki-crosses-20-million-passenger-vehicle-sales-mark

கார் உற்பத்தி நிறுவனமான‌ மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் இதுவரை 2 கோடி கார்களை விற்பனை செய்து சாதனை ப‌டைத்துள்ளது. 


Advertisement

கடந்த 1983ஆம் ஆண்டு இந்தியாவில் செயல்படத் தொடங்கிய  மாருதி சுசுகி , 37 ஆண்டு‌களுக்கும் குறைவான காலகட்டத்தில் ‌இந்த சாதனையைப் படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 1 கோடி வாகனங்களை விற்பனை செய்ய 29 வருடங்கள் ஆன நிலையில் அடுத்த 1 கோடி வாகனங்களை 8 வருடங்களிலேயே விற்பனை செய்திருப்பது புதிய மைல்கல் என மாருதி சுசுகி இந்தியா நிறுவ‌னத்தின் நிர்வாக இயக்குநரும் முதன்மை செயல் அதிகாரியுமான கெனிச்சி அயுகா‌வா தெரிவித்துள்ளார். 


Advertisement

இந்நிலையில், சுசுகி மோட்டார் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து இந்திய சந்தையில் சிறிய ரக மின்சார காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. பல்வேறு நிலப்பரப்புகளிலும் காலநிலைகளிலும் அதன் செயல்திறனை கண்டறிய சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement