[X] Close >

முன்பு வதந்தி.... இப்போது வாட்ஸ் அப்.....நம்புவதா? வேண்டாமா...

Whats-app-rumors---Special-story

‘இன்றைய டிஜிட்டல் உலகத்தில்’ பல செய்திகளும், தகவல்களும், வாட்ஸ் அப் மூலம் வெகு வேகமாகப் பரவி விடுகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் நேரடியாக தொலைக்காட்சிகளை பார்ப்பதில்லை. தகவல்கள் மற்றும் செய்திகள் அவர்களை சென்றடைய வாட்ஸ் அப் வெகுவாக உதவுகிறது என்கிறார்கள் ஊடகத்துறையினர்.


Advertisement

2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் செய்திகளை உடனடியாக பெற வாட்ஸ் அப், வி-சாட் உதவியதாக கூறுகிறது செய்தி நிறுவனங்களில் ஜாம்பவான பிபிசி நிறுவனம். அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களை தக்க வைக்க வாட்ஸ் அப்பை பெரிதும் சார்ந்திருப்பதாக கூறுகிறது. சம்மனை வாங்க மறுத்தவருக்கு இந்தியாவில் முதல்முறையாக ஹரியானாவில் நீதிமன்றம் வாட்ஸ் அப் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அண்மை காலமாக நடைபெற்று வரும் பல்வேறு கலவரங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் பரவும் தகவல்களே காரணம் என கூறப்படுகிறது. முன்பு ஒரு காலத்தில் வதந்தி இப்படித்தான் பரவி பாடாய்ப் படுத்தியது. தற்போது விஞ்ஞானப் பூர்வமாக வதந்தியைப் பரப்ப வாட்ஸ் அப் பயன்பட்டு வருகிறது. இதனால் வாட்ஸ் அப்பில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என வாட்ஸ்அப்பிலேயே வலுவாக கோரிக்கை எழுந்து வருகிறது. 

உத்தரப்பிரதேசம் சாஹான்பூரில் தலித் மக்களுக்கும் - தாகுர் இன மக்களுக்கும் இடையே நடைபெற்ற  சாதிய வன்முறைக்கு வாட்ஸ் அப்பில் பரவிய வதந்தியே காரணம் எனக்கூறப்படுகிறது. இதனால் அங்கு வாட்ஸ் அப் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் வாட்ஸ்- அப் வதந்தியால் பல கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. 2013ம் ஆண்டும் நடைபெற்ற முஷாபர் கலவரத்தை தூண்டியதில் வாட்ஸ்-அப்பில் பரவிய வதந்திதான் முக்கிய காரணம் என்கிறார்கள் காவல்துறையினர். இந்தக் கலவரத்தில் 60 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்க அதிகமானோர் காயமடைந்தனர். அதே போல் கடந்த வாரம் ஜார்கண்ட் மாநிலம், கர்ஸ்வான் மாவட்டத்தில் குழந்தைகளை கடத்தும் கும்பல் சுற்றி வருவதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. இதனையடுத்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 3 பேரை சுற்றி வளைத்த கிராம மக்கள், அவர்களை அடித்தே கொன்ற சம்பவமும் அரங்கேறியது. அங்கு சென்ற காவல்துறையினரும் தாக்குதலுக்கு ஆளாகினர். 


Advertisement

உலகம் முழுவதும் 160 பில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது வாட்ஸ்-அப். ஆனால் அதன் மூலம் அனுப்பப்படும், அல்லது பெறப்படும் தகவல் கண்காணிக்கப்படுவது இல்லை. வாட்ஸ் அப்பை போன்ற சமூக வலைத்தளமான ஃபேஸ் புக் சர்ச்சைக்குறிய தகவல்களை பயனாளர்கள் புகார்களாக தெரிவிக்கும்போது அதனைக் கண்டறிந்து தகவல் வெளியிட்டவரின் கணக்கை முடக்கும் வழியை வைத்திருக்கிறது.  ஃபேஸ்புக்கில் ஒரு தகவல் 7,000 முறை பகிர்ந்து, அல்லது 20,000 முறை பார்க்கப்பட்டது என்றால் அந்த செய்தி உண்மையானது தானா என்பதை கண்காணிக்க சில டூல்ஸ்கள் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.  ஆனால் வாட்ஸ் அப்பில் அந்த வசதி இல்லை. தகவல் தொழில் நுட்ப யுகத்தில் பிரம்மாண்டமாக வளர்ந்து வரும் வாட்ஸ்அப்பை நாம் நிறுத்தி விட முடியாது. ஆனால் அதன் வீரியத்தைப் புரிந்து கொண்டு பயன்படுத்தலாம். வாட்ஸ் அப் ஒரு கருவியே. அந்தக் கருவியை யார் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொருத்து அதன் தன்மை மாறுபடும். கத்தியை வைத்து சமையலும் செய்யலாம் ஆளைக் குத்திக் கொலையும் செய்யலாம். வாட்ஸ் அப்பும் அப்படித்தான். முட்டாள்களின் கையிலும், முரடர்கள் கையிலும் அந்த ஆயுதம் இருக்குமெனில் அதனால் வன்முறையும் கலவரமும் வரும். அறிவாளிகள் கையில் இருந்தால், பயனுள்ள தகவல்களை பரப்பும். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close