போர் விமானம் என நினைத்து இந்திய பயணிகள் விமானத்தை பாகிஸ்தான் போர் விமானங்கள் வழிமறித்த செய்தி இப்போது வெளியாகியுள்ளது.
டெல்லியில் இருந்து ஆப்கானிஸ்தானின் காபூல் நகருக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் சென்று வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதியும் வழக்கம் போல டெல்லியில் இருந்து இந்த விமானம் காபூலுக்குப் புறப்பட்டது. அதில் 120 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததும், இரண்டு எப்-16 ரக பாகிஸ்தான் போர் விமானங்கள் அதை நடுவானில் மறித்தன.
தாழ்வாகப் பறக்கும்படியும், விமான விவரங்களைக் கூறும்படியும் பாகிஸ்தான் விமானிகள் சொன்னார்கள். ’இது பயணிகள் விமானம், போர் விமானம் அல்ல’ என்று ஸ்பைஸ்ஜெட் விமானி தெரிவித்தார். அதை உறுதிப்படுத்திய பாகிஸ்தான் போர் விமானங்கள், ஆப்கானிஸ்தான் எல்லை வரை, இந்திய விமானத்துக்கு பாதுகாப்பாகச் சென்றன. இந்த தகவலை மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜம்முகாஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்த பின் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து, இந்த சம்பவம் நடந்துள்ளது.
Loading More post
சாரட் வண்டியில் வலம்வந்த நடராஜன்... விழாக்கோலம் பூண்ட சின்னப்பம்பட்டி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் - மோசடி செய்து முதல் பரிசு பெற்றது அம்பலம்?
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
“14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்” - நடராஜனுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
புனே: கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீர் தீவிபத்து
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!