துப்பாக்கிச் சுடும் போட்டி: இரண்டு பிரிவுகளில் 10 இடங்களுக்குள் வந்த அஜித்?

AJITH-s-Delhi-Rifle-Shooting-Competitions-Top-10-ranking-list

டெல்லியில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித், இரண்டு பிரிவுகளில் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது தொடர்பான பெயர்ப்பட்டியலை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு அடுத்தப் படத்திற்கு ரெடியாகி விட்டார் அஜீத். ’தல 60’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ’நேர்கொண்ட பார்வை’யை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் நவம்பரில் தொடங்க உள்ளது. இதற்காக தன்னுடைய ‘சால்ட் அண்ட் பெப்பர்’ லுக்கில் இருந்து இளமை தோற்றத்துக்கு அஜித் மாறியுள்ளார். இதற்கிடையே துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆர்வத்தை திருப்பி இருந்த அஜித் டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்றார். 


Advertisement

டெல்லியில் உள்ள டாக்டர்.கர்னிசிங் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையம் ஒன்றில் அஜித் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அவர் மூன்று பிரிவுகளில் கலந்துகொண்டதாகவும் அதில் இரண்டு பிரிவுகளில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. 

இது தொடர்பான பெயர்ப்பட்டியலும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதில், ஸ்டேண்டர்ட் பிஸ்டல் பிரிவில் 12-ம் இடத்தையும், ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பிரிவில் 9-வது இடத்தையும், ஃப்ரி பிஸ்டல் பிரிவில் 8-வது இடத்தையும் பிடித்துள்ளார்.


Advertisement

இரண்டு பிரிவுகளில் முதல் 10 இடங்களுக்குள் அஜித் இடம் பிடித்துள்ளதை அவர் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement