மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு: தமிழக அரசு அறிவிப்பு

tamilnadu-govt-announced-100-percent-tax-free-for-electric-car-production-in-tamilnadu

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று புதிய மின்சார வாகன கொள்கையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. 


Advertisement

தமிழக அரசின் புதிய மின்சார வாகன கொள்கை அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அந்த அறிக்கையில், 31.12.2022 வரை தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாகன தயாரிப்பாளர்களுக்கு 15 சதவீதம் முதலீட்டு மானியமாக வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் வரிவிலக்கு மற்றும் முதலீட்டு மானியம் காரணமாக மின்சார வாகனங்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement