பெண்ணையும், மூன்று பெண் குழந்தைகளையும் கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு நான்கு ஆயுள் தண்டனைகளை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராயப்பேட்டை முத்து தெருவைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். கணவரைப் பிரிந்து, தனது 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவருடன் தொடர்பில் இருந்த சின்னராஜ், பெண் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயற்சித்ததால் சின்னராஜுடனான தொடர்பை பாண்டியம்மாள் துண்டித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சின்னராஜ், பாண்டியம்மாள் மற்றும் மூன்று பெண் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவானார். கடந்த 2016ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ராயப்பேட்டை போலீசார், சின்னராஜை கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா, குற்றஞ்சாட்டப்பட்ட சின்னராஜ் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு நான்கு கொலை வழக்குகளில் 4 ஆயுள் தண்டனைகள் விதித்து உத்தரவிட்டார்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!