வேன்கள் மீது லாரி கவிழ்ந்து 16 பேர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரபிரதேசத்தில் வேன்களின் மீது லாரி கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.


Advertisement

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் சென்றுகொண்டிருந்த வேன்களின் மீது கவிழ்ந்தது. இதில், வேனில் இருந்த 3 குழந்தைகள், ஒரு பெண் உட்பட 16 பேர், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.


Advertisement

இதையடுத்து போலீசாருக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

loading...

Advertisement

Advertisement

Advertisement