அணு ஆயுதப் போரில் யாரும் வெற்றியாளராக இருக்க முடியாது - இந்தியாவுக்கு இம்ரான் எச்சரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அணு ஆயுதப் போரில் யாரும் வெற்றியாளராக இருக்க முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். 


Advertisement

அணுஆயுதக் கொள்கை குறித்து சமீபத்தில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் “எதிரி நாடுகள் பயன்படுத்தினால் மட்டுமே பாதுகாப்புக்காக அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவது என்ற கொள்கையை இந்தியா கையாண்டு வருகிறது. ஆனால் இனி அந்தக் கொள்கையில் மாற்றம் வரலாம். எதிர்காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அணுக் கொள்கையில் மாற்றங்கள் வரலாம்" என்று கூறியிருந்தார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை ரத்து செய்த பின்னர், இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான நிலை ஏற்பட்டுள்ள தருணத்தில் அவருடைய இந்த கருத்தை தெரிவித்து இருந்தார்.

              


Advertisement

இந்நிலையில், அணு ஆயுதப் போரில் யாரும் வெற்றியாளராக இருக்க முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் தொலைக்காட்சியில் இன்று பேசிய இம்ரான் கான், “ஐ.நா பொது சபையில் செப்டம்பர் 27ம் தேதி பேசும் போது காஷ்மீர் விவகாரம் குறித்து உலகத்தின் மத்தியில் எடுத்துக் கூறுவேன். காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்வதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். உலகத் தலைவர்கள் மற்றும் தூதரகங்களிடமும் பேசியுள்ளோம். 1965 ஆம் ஆண்டிற்கு பிறகு முதன் முறையாக காஷ்மீர் விவகாரம் குறித்து கூட்டம் நடத்தவுள்ளது. சர்வதேச ஊடகங்களும் இந்த விவகாரத்தை பேசுகின்றன. 

                              

பாகிஸ்தானை விமர்சிக்கும் போக்கு இந்தியாவிடம் எப்போதும் உள்ளது. கடந்த சில பத்தாண்டுகளாக தீவிரமடைந்து வந்த காஷ்மீர் பிரச்னை தீர்வு காண வேண்டிய நேரம் வந்துள்ளது. இந்த பிரச்னை போரை நோக்கி சென்றால், இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் இருப்பது நினைவில் இருக்கட்டும். அணு ஆயுதப் போரில் யாரும் வெற்றியாளராக இருக்க முடியாது. அது உலக அளவில் அது மாறவும் செய்யும். வல்லரசு நாடுகளுக்கு இதில் முக்கிய பொறுப்புள்ளது. அவர்கள் எங்களை ஆதரித்தாலும், இல்லையென்றாலும், பாகிஸ்தான் ஒவ்வொரு எல்லைக்கும் செல்லும்” என்றார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement