“காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்” - அமெரிக்கா 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காஷ்மீரில் 370 ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.


Advertisement

அமெரிக்காவின் பாதுகாப்பு செயலர் மார்க் எஸ்பர் உடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேசினார். அப்போது, கடந்த ஜூலை 23ஆம் தேதி அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளராக பொறுப்பேற்ற மார்க் எஸ்பருக்கு வாழ்த்து தெரிவித்தார். 

இந்த உரையாடலின் போது, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து எஸ்பரிடம் ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார். காஷ்மீரில் அமைதியும், நிலைத்தன்மையும் நிலவ இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.


Advertisement

       

சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு பொருளாதார வளர்ச்சி, ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜ்நாத் சிங் அவரிடம் கூறினார். 

ஜம்மு-காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டிய மார்க் எஸ்பர்  இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனவும் தெரிவித்தார். மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையே இருநாட்டு விவகாரத்தை அவர்களே பேசித்தீர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Advertisement

                

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி மூலம் பேசியிருந்தார். 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்த உரையாடலில் இந்தியா பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்து பேசினர்.  

loading...

Advertisement

Advertisement

Advertisement