காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய பல்கலைக்கழகத்தில் சுவரொட்டி ஒட்டியதாக மாணவர்கள் 30 பேருக்கு நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து, திருவாரூரில் அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கி உத்தரவிட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில், ஜம்மு- காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் 30 பேரிடம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு, விளக்கம் கேட்டு பல்கலைக்கழக நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது
Loading More post
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி
திட்டமிட்டப்படி குடியரசுத்தினத்தன்று டிராக்டர் பேரணி: விவசாயிகள் உறுதி!
டெல்லி விவசாயிகள் போராட்டம்.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்.. முக்கியச் செய்திகள்!
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
பெண் காவலரும், ஆண் காவலரும் ஒரே அறையில் இருந்ததற்காக டிஸ்மிஸ் செய்ய முடியாது: நீதிமன்றம்
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!