இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஆகிறார் து.ராஜா

D-Raja-s-name-proposed-for-CPI-general-secretary

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த து.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 


Advertisement

அக்கட்சியின் தற்போதைய பொதுச்செயலாளரான சுதாகர் ரெட்டி, உடல் நிலை காரணமாக, தனது பொறுப்பிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார். இதையடுத்து அவர் தனக்குப் பதிலாக து.ராஜாவின் பெயரை பரிந்துரை செய்துள்ளார். 

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர்கள் கூட்டம் தில்லியில் நேற்று நடந்தது. இதில் புதிய பொதுச்செய லாளரை தேர்ந்தெடுப்பது பற்றி பேசப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த பினோய் விஸ்வம், அக்கட்சியின் மூத்த தலைவர் அமர் ஜித் கவுர், அதுல்குமார் அஞ்சன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.


Advertisement

கூட்டத்தின் முடிவில் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜாவை, அகில இந்திய பொதுச்செயலாளராக நியமிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. இதன் முடிவில் அதிகாரப் பூர்வமாக, து.ராஜா அகில இந்திய பொதுச்செயலாளராக அறிவிக்கப்படுகிறார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement