அவதூறு வழக்கு: பாட்னா நீதிமன்றத்தில் ஆஜராகிறார் ராகுல் காந்தி

Rahul-Gandhi-To-Appear-Before-Patna-Court-Today

மோடி என்ற குடும்ப பெயர் குறித்து அவதூறு கருத்து பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், பாட்னா நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று ஆஜராக உள்ளார்.


Advertisement

மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது, மோடி என்ற குடும்ப பெயர் கொண்டுள்ள அனைவரும் திருடர்களாக ஏன் இருக்கி றார்கள் என ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். பலகோடி ரூபாய் வங்கி மோசடி செய்த நிரவ் மோடி, ஐபிஎல் போட்டி நடத்தி யதில் நிதி முறைகேடு செய்த லலித் மோடி உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடியையும் மறைமுகமாக குறிப்பிடும் வகையில் ராகுல் பேசியிருந்தார். 


Advertisement

இதைக் கண்டித்து, பீகார் துணை முதலமைச்சர் சுஷில்குமார் மோடி, பாட்னா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக ராகுல் காந்தி இன்று பாட்னா நீதிமன்றத்தில் ஆஜ ராகிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல், பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகப் போவதாக குறிப்பிட் டுள்ளார். உண்மை வெல்லும் என்பதைக் குறிக்கும் சத்யமேவ ஜெயதே என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement