சமூக ஆர்வலர் பாலியல் புகார்: நடிகர் விநாயகன் மீது வழக்குப் பதிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாலியல் குற்றச்சாட்டில் பிரபல மலையாள நடிகர் விநாயகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளார்.


Advertisement

பிரபல மலையாள நடிகர் விநாயகன். வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், தமிழில் ‘திமிரு’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக, நடக்க முடியாதவராக நடித்திருந்தார். சமீபத்தில் இவர், பாஜகவுக்கு எதிரான கருத்தைக் கூறியதால் சர்ச்சையில் சிக்கினார். இதனால், சமூக வலைத்தளங்களில் சாதி மற்றும் நிறம் தொடர்பான தாக்குதலுக்கு உள்ளானார்.


Advertisement

இந்நிலையில் தற்போது அவர் மீது, கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் மாடலுமான மிருதுளா தேவி, மீ டூ புகார் கூறியிருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அழைத்த போது, ஆபாசமாகப் பேசியதாக விநாயகன் மீது புகார் கொடுத்தார். தன்னை மட்டுமல்லாது தன் தாயையும் அவர் விருப்பும்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சொன்னதாக, விநாயகன் மீது அவர் கல்பட்டா காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
 

loading...

Advertisement

Advertisement

Advertisement