இன்றைய முக்கிய செய்திகள் சில !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘வாயு’ புயல் இன்று பிற்பகலில் குஜராத் அருகே கரையைக் கடக்கிறது. இதனால் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


Advertisement

முத்தலாக் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மசோதாவை தாக்கல் செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. காயத்தால் அவதிப்படும் ஷிகர் தவானுக்கு பதில் திணேஷ் கார்த்திக் களம் காண வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.


Advertisement

ராஜராஜசோழன் குறித்த சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி பா.ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சரியான நேரத்தில் அலுவலகத்திற்கு வரும்படி அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். வீட்டிலிருந்தே பணி செய்வதை தவிர்க்கும்படியும் வலியுறுத்தல்.


Advertisement

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு. மத்திய உள்துறை அமைச்சரை ஆளுநர் சந்தித்துவிட்டு திரும்பிய நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement