“வாரணாசியைப் போல் கேரளாவை நேசிக்கிறேன்” - பிரதமர் மோடி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வாரணாசியை எந்த அளவு நேசிக்கிறேனோ அதே அளவு கேரளாவையும் நேசிப்பாதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குருவாயூர் கோயிலில் சாமிதரிசனம் செய்த பின் தெரிவித்தார். 


Advertisement

இரண்டாவது‌ முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்ட நரேந்திர மோடி தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து கொச்சி வந்தார். பின் அவர், கடற்படை சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை குருவாயூர் சென்றடைந்தார். வேட்டி அணிந்து வந்த மோடி, குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் தனது எடைக்கு நிகராக தாமரை மலர்களை வழங்கி துலாபார நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்.

Image result for நரேந்திர மோடி


Advertisement

இதையடுத்து கிருஷ்ணா பள்ளி வளாகத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் ‌கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றினார். இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் இவர் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும். அந்தப் பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, கேரளாவில் பாஜக ஒரு இடத்தில் கூட காலூன்ற முடியாது என சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றார்.  

Image result for நரேந்திர மோடி
தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறிய அவர், வாக்குகளை பெறுவதற்காகவோ தேர்தலுக்காகவோ‌ நாங்கள் உழைக்கவில்லை. 365 நாட்களும் மக்களுக்காக பணியாற்றுகிறோம் அதுவே எங்களுக்கு கிடைத்த தவம் எனத் தெரிவித்தார். தான் ஒரு மக்களின் சேவகர் எனக் கூறிய மோடி, வாரணாசியை எந்த அளவு நான் நேசிக்கிறேனோ அதே அளவு கேரளாவையும் நேசிக்கிறேன் என்று தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement