JUST IN

Advertisement

பிரதமராக பதவியேற்றார் மோடி : முதன்முறையாக மத்திய அமைச்சரானார் அமித் ஷா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்றார். 


Advertisement

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் முற்றத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் வெளிநாட்டு தலைவர்கள், இந்திய மாநிலங்களில் பல முதலமைச்சர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் உட்பட 8000 பேர் பங்கேற்றனர். பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


Advertisement

பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர். அதன்படி, கடந்த முறை மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் முதலில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். அவரைத் தொடர்ந்து பாஜகவின் தலைவர் அமித் ஷா மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். அமித் ஷா மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொள்வது இதுவே முதல் முறையாகும். 

கடந்த ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி இந்த முறை மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொள்ளாததால், அவரது நிதித்துறை அமித் ஷாவிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து நிதின் கட்கரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன், ராம்விலாஸ் பசுவான், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் மத்திய அமைச்சர்களாக பதிவியேற்றுக்கொண்டனர்.
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement