முதலமைச்சர் பழனிசாமிக்கு கொலை மிரட்டல் - மர்ம நபருக்கு வலைவீச்சு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முதலமைச்சர் எடப்பா‌டி பழனிசாமியை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 


Advertisement

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கொடைக்கானலில் வைத்து கொலை செய்யப்போவதாக‌ மிரட்டல் விடுத்தார். தொலைபேசியில் அழைத்த அந்த நபர் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, திண்டுக்கலில் இருந்து அவர் பேசியது தெரியவந்தது. 

சென்னை காவல்துறையினர் அளி‌‌த்த தகவலை அடுத்து திண்டுக்கல் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, மிரட்டல் விடுத்த ‌நபர் வத்தல‌குண்டு அடுத்த விராலிப்பட்டியை சேர்ந்த குரு சங்கர் என தெரியவந்துள்ளது. மிரட்டல் விடுத்த குரு சங்கரை திண்டுக்கல் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதற்கு முன்னரும் சிலர் முதலமைச்சர் பழனிசாமி வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்ததும், அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement