ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ‘ரியல்மி யு1’ வரும் 10ஆம் வெளியாகிறது.
சீன நிறுவனமான ரியல்மி தனது புதிய ஸ்மார்ட்போனை வரும் 10ஆம் வெளியிடுகிறது. இந்த போன் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்டதாகும். அத்துடன் இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் என்ற ரகத்திலும் வெளியிடப்படுகிறது. இதில் 3 ஜிபி ரேம் ரகத்தின் விலை ரூ.10,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் ரகத்தின் விலை ரூ.11,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் ‘யு1’ என்ற மாடல் போனை ரியல்மி வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அதே மாடலில் புதிய ஸ்மார்ட்போனை வெளியிடுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்குதளத்தில் செயல்படும். அத்துடன் 6.3 ஃபுல் ஹெச்டி தன்மைகொண்ட எல்.இ.டி டிஸ்ப்ளே இதில் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 13 எம்பி (மெகா பிக்ஸல்) மற்றும் 2 எம்பி என இரட்டை கேமராவை கொண்டுள்ளது. முன்புறம் 25 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமரா உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனை 64 ஜிபி ஸ்டோரேஜுடன் கூடுதலாக 256 ஜிபி வரை மைக்ரோ சிப் மூலம் அதிகரித்துக்கொள்ளலாம். அத்துடன் 3,500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?