அசுத்த ரத்தம் விவகாரம் : ஆய்வு செய்ய குழு அமைப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தருமபுரி அரசு மருத்துவமனையில் அசுத்த ரத்தம் செலுத்தப்பட்டதால் உயிரிழப்பு என்ற புகாரை ஆய்வு செய்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.


Advertisement

அசுத்த ரத்தம் காரணமாக தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 15 கர்ப்பிணி பெண்கள் உயிரிந்துள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியது. இந்த உயிரிழப்புகள் அனைத்தும் 3 அரசு மருத்துவமனைகளில் நிகழ்ந்திருப்பதாகவும், பாதுகாக்கப்பட்ட அறையில் நிலவிய வெப்பநிலை மாற்றத்தால் ரத்தம் மாசுபாடு அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. அதனை சோதனை செய்த மருத்துவர்கள் பாதுகாப்பான ரத்தம் என்று சான்றிதழ் அளித்திருப்பதும் தெரியவந்தது. 


Advertisement

தர்மபுரி, ஒசூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் மூத்த மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகளின் போதுதான், சில கர்ப்பிணி பெண்களின் உயிரிழப்புக்கு அசுத்தமான ரத்தமே காரணம் என்று கண்டறியப்பட்டது. மேலும் இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், மேலும் சில பெண் நோயாளிகளுக்கு இந்த ரத்தத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியது. அத்துடன் சுகாதாரத்துறை முதன்மை செயலர், மருத்துவ கல்வியக இயக்குநர் அறிக்கை அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்தின் திட்ட இயக்குநரும் 2 வாரத்தில் அறிக்கை தர வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 


Advertisement

இந்நிலையில், தருமபுரியில் அசுத்த ரத்தம் செலுத்தப்பட்டதால் உயிரிழப்பு என்ற புகாரை ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 
தமிழ்நாடு ஊரக நலப்பணி இயக்ககம் மற்றும் மருத்துவக்கல்வி இயக்ககம் இணைந்து ஐந்து பேர் கொண்ட அந்தக் குழுவை அமைத்துள்ளது. முன்னதாக, அசுத்த ரத்தம் ஏற்றப்பட்டதால் 15 பேர் உயிரிழந்தது, முற்றிலும் தவறு என இன்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் புதியதலைமுறைக்கு தெரிவித்திருந்தார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement