புளியமரத்தில் கார் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அதிவேகமாக சென்ற கார் சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 


Advertisement

குடியாத்தம் அடுத்த மேல் ஆலத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, 7 பேர் காரில் புறப்பட்டுச் சென்றனர். ஆம்பூர் அடுத்த அயத் தம்பட்டு பகுதியில் உள்ள பேரணாம்பட்டு சாலையில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது கார் பலமாக மோதியது. 


Advertisement

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த முஹம்மத் சஃப்பான், உசேன், இம்ரான் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாய மடைந்த 3 பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement