[X] Close >

ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி வெற்றி 

Records-India-broke-in-their-4-1-victory-over-Thailand

17 வது ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் தாய்லாந்து அணிக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.


Advertisement

இந்தியா உட்பட 24 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. 

17 வது ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி நேற்று முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 4 நகரங்களில் 8 ஸ்டேடியங்களில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.


Advertisement

போட்டியில் பங்கேற்கும் அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். 

இந்நிலையில், இன்று இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை தாய்லாந்துடன் மோதியது. இதில் 4 - 1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இதையடுத்து வரும் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டத்தை சமன் செய்தாலே எளிதில் நாக் அவுட் சுற்றில் இந்திய அணி கால்பதித்து விடலாம்.


Advertisement

பிபா தரவரிசையில் இந்திய அணி 97-வது இடத்திலும், தாய்லாந்து 118-வது இடத்திலும் உள்ளன. இதுவரை இரு அணிகளும் 25 முறை நேருக்குநேர் மோதி தாய்லாந்து 12 ஆட்டங்களிலும், இந்தியா 6 ஆட்டங்களிலும் வெற்றி வெற்றுள்ளன. மேலும் 7 ஆட்டங்கள் சமனில் முடிவடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close