JUST IN
  • BREAKING-NEWS ‌அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையால் இந்தியாவிற்கு எந்த பலனும் இருக்காது..! - சுப்பிரமணியன் சுவாமி
  • BREAKING-NEWS ‌கருணாநிதியின் திமுக தற்போது பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ‌இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து குறித்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு துனை ஆணையர் நாகஜோதி நியமனம்
  • BREAKING-NEWS ‌சிஏஏ, என்பிஆர் சட்டங்களால் தமிழக மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
  • BREAKING-NEWS ‌’கற்றது கை மண் அளவு, கல்லாதது உலக அளவு’ - மன் கி பாத் நிகழ்ச்சியில் ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேச்சு
  • BREAKING-NEWS ‌இந்தியாவில் பல்லுயிரியல் என்பது மதிப்பு மிக்க பொக்கிஷம்; அதை நாம் பாதுகாக்க வேண்டும் - 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

ஆளுங்கட்சி எம்எல்ஏ திடீர் உண்ணாவிரதம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தொகுதி மேம்பாட்டு திட்டங்களுக்கு அதிகாரிகள் தரப்பிலிருந்து ஒத்துழைப்பு இல்லையெனக் கூறி, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ, திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

திருப்பூர் தெற்கு தொகுதி ‌சட்டப்பேரவை உறுப்பினர் குணசேகரன். அதிமுக அம்மா அணியை சேர்ந்த இவர், இன்று காலை திருப்பூர் குமரன் நினைவிடத்துக்கு அருகில் அமர்ந்தவாறு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். தொகுதி மேம்பாட்டு திட்டங்களுக்கு அதிகாரிகள் தரப்பிலிருந்து போதிய ஒத்துழைப்பு அளிக்கப்படவில்லை எ‌ன்றும் தொகுதிவாசிகளின் குறைகள் தீர்க்கப்படாததை கண்டித்தும் அவர் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்‌ளார். அவரது ஆதரவாளர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

 தகவலறிந்து 11 மணியளவில் அங்கு வந்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி, கோரிக்கைகளை மனுவாக அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அளித்த மோரை அருந்திய எம்.எல்.ஏ. குணசேகரன், உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

Related Tags : thiruppur mlamla thiruppur
Advertisement: