ஹைசிஸ் உட்பட 31 செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்.
இந்தியா உருவாக்கிய ஒரு செயற்கைக்கோளும், வெளிநாடுகளைச் சேர்ந்த 30 செயற்கைக்கோளும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாம் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இந்தியாவின் வேளாண்மை, வனப்பகுதி, கடலோர பகுதி, உள்நாட்டு நீர் நிலைகள், மண்வளம் மற்றும் ராணுவ உளவுப் பணிக்காக ‘ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங்’ (ஹைசிஸ்)’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியது. டிஜிட்டல் இமேஜிங் சக்தியுடன், ஸ்பெக்ட்ரோஸ்கோபி தொழில்நுட்பத்தையும் இணைத்து இந்த ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள ஆப்டிக்கல் இமேஜிக் டிடெக்டர் அரே சிப்பை அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோவின் எலக்ட்ரானிக் பிரிவும், சண்டிகரில் உள்ள செமி-கண்டக்டர் ஆய்வு மையமும் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்தச் செயற்கைக்கோள் 380 கிலோ எடை கொண்டதாகும்.
இந்தச் செயற்கைக்கோள் விண்ணிலிருந்து, பூமியில் உள்ள பகுதிகளின் எலக்ட்ரோமேக்னடிக் அலைக்கற்றைகளில் இருந்து தகவல்களை சேகரித்து அனுப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெரிய செயற்கைக்கோள்களுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த 30 சிறிய மற்றும் நானோ செயற்கைக்கோள்களையும் சேர்த்து பிஎஸ்எல்வி சி43 ராக்கெட்டில் அனுப்பியுள்ளது.
இதில் ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, ஸ்பெயின், ஃபின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து நாடைச் சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோளும், அமெரிக்காவைச் சேர்ந்த 23 செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளின் செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 504 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளன.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!