[X] Close >

பாம்பன் பாலத்தை கஜா புயல் தாக்கியதா..? - உலவும் போலி வீடியோ காட்சி

Gaja-cyclone-attacked-Pamban-bridge-

கஜா புயலால் பாம்பன் பாலம் பாதிப்பிற்குள்ளானதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ போலியானது என தெரியவந்துள்ளது.


Advertisement

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ள கஜா புயலால் ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மின் விநியோகம் தடைபட்டுள்ளது. ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே கஜா புயலின்போது ராமேஸ்வரத்தின் பாம்பன் பாலமும் கடுமையாக பாதிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி இருந்தன.


Advertisement

இந்நிலையில் கஜா புயலால் பாம்பன் பாலம் பாதிப்பிற்குள்ளானதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ போலியானது என தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஏழுமலை வெங்கடேசன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “பாம்பன் பாலத்தை கடல் அலைகள் தாக்கும் காட்சியை பாரீர்னு ரீ ரிலிஸ் பண்ணிட்டாங்க.. ஆனால் இந்திரா காந்தி பாலத்துக்கு பக்கத்துல இருந்த ரயில்வே லைன் எங்கன்னுகூட அவுங்க யோசிக்கல.. 

இதுல காமடி என்னென்னா போன வருஷம் ஆகஸ்ட் 24-ந்தேதி இந்த வீடியோ, லட்சதீவின் மினிகாய் கிழக்கு துறைமுக பாலம் மீது ராட்சத அலைகள்ன்னு அப்லோடு ஆயிருக்கு.. அந்த வீடியோவே ஒரிஜினல்தான்னு ஒருத்தரும் அடிச்சி சொல்லலை.


Advertisement

காஞ்சிபுரம் பாலத்தை கடலலை தாக்கும் பயங்கர காட்சியை பாரீர்.. அடேய் காஞ்சிபுரத்துல கடலே இல்லைடா.. அட என்னைக்காவது ஒரு நாள் வரும் சார்..இதே மாதிரி பாலம் கட்டாம போவாங்களா? இல்லை கடல் அலைதான் தாக்காம போவுமா?” என பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இன்று ஒவ்வொரு நாளும் ஏராளமான செய்திகள் உலா வருகின்றன. ஆனால் அனைத்து செய்திகளும் உண்மையான என்றால் நிச்சயம் கிடையாது. அப்படித்தான் பாம்பன் பாலம் கஜா புயலால் தாக்கப்படும் காட்சிகள் என வெளியானவை போலியானது என தெரியவந்துள்ளது. ஒரு செய்தியை ஷேர் செய்யும் முன் நாமும் ஒருமுறை அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முற்படுவது சிறந்தது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close