கிருஷ்ணர் பற்றி தான் வெளியிட்ட கருத்துக்காக, பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷண், மன்னிப்புக் கேட்டார்.
உத்தரபிரதேசத்தில் புதிய முதல்–மந்திரியாக பதவியேற்றுள்ள யோகி ஆதித்யநாத், ஈவ்–டீசிங்கில் ஈடுபடுவோரை கைது செய்ய சிறப்பு போலீஸ் படையை உருவாக்கி உள்ளார். இதற்கு ரோமியோ எதிர்ப்பு படை என பெயரிடப்பட்டுள்ளது. இதை பிரபல வக்கீலும் ஆம் ஆத்மியில் இருந்து நீக்கப்பட்டவருமான பிரசாந்த் பூஷண் தனது டிவிட்டர் தளத்தில் விமர்சித்திருந்தார்.
‘ரோமியோ ஒரு பெண்ணை மட்டுமே காதலித்தார். பகவான் கிருஷ்ணர்தான் புகழ்பெற்ற ஈவ் டீசர். சிறப்பு படையினரை ‘கிருஷ்ணா எதிர்ப்பு படை’ என அழைக்க, யோகி ஆதித்யநாத்துக்கு தைரியம் இருக்கிறதா?’என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
டெல்லி பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் தேஜிந்தர் பால், கோடிக்கணக்கான பக்தர்களின் மனதை பூஷன் புண்படுத்திவிட்டார் என டெல்லி போலீசிலும், உத்தரபிரதேச காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜீஷன் ஹைதர், லக்னோ போலீசிலும் தனித்தனியாக புகார் செய்துள்ளனர்.
எதிர்ப்பு அதிகமானதை அடுத்து, சர்ச்சைக்குரிய கருத்தை பிரசாந்த் பூஷண் தனது டிவிட்டரில் இருந்து நீக்கினார். எனது டிவிட்டுக்கு மன்னிப்பு கேட்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
Loading More post
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவுக்கு கருணாஸ் ஆதரவு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 திட்டம் - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கேள்வி
அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் சிக்கல்: ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்?
"வாக்குகள் சிதறாது; உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம்" - டிடிவி தினகரன்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!