[X] Close >

திரிபுராவில் மார்க்சிஸ்ட் நாளிதழ் உரிமம் ரத்து

Forty-year-old-CPIMs-mouthpiece-Daily-Desher-Katha-in-BJP-ruled-Tripura-banned

திரிபுராவில் வெளியாகிவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டெய்லி தேஷெர் கதா (DAILY DESHER KATHA) நாளிதழின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக குளறுபடி நிகழ்ந்ததாக கூறி, அகர்தலா மாவட்ட ஆட்சியர், நாளிதழுக்கு தடை விதிக்க பரிந்துரைத்தார். இதனை அடிப்படையாக கொண்டு இந்திய செய்தி பத்திரிகைகள் பதிவாளர் அமைப்பு நாளிதழுக்கான உரிமத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


Advertisement

திட்டமிட்டே பாஜக அரசு இவ்வாறு செய்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் இதனை மறுத்துள்ள திரிபுரா மாநில பாஜகவினர், அந்த நாளிதழ் முறைகேடாக செயல்பட்டுவந்ததாலேயே உரிமம் ரத்து செய்யப்பட்டதாக கூறியுள்ளனர்.

திரிபுராவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய அளவிலான வெற்றி பெற்றது. 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியை பாரதிய ஜனதா வீழ்த்திவிட்டது. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. தேர்தல் முடிவில் வந்த சில தினங்களிலேயே அங்கு லெனின் சிலைகள் உடைக்கப்பட்டு சர்ச்சை ஏற்பட்டது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close