[X] Close >

“திமுகவில் உதயநிதி இருப்பதில் ஆச்சர்யமில்லை” - மு.க.ஸ்டாலின்

Dmk-leader-MK-Stalin-on-udhayanidhi-political-entry

திமுகவில் உதயநிதி இருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

திமுகவில் வாரிசு அரசியல் இருப்பதாக நீண்ட காலமாகவே விமர்சனங்கள் இருந்து வருகிறது. திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் குடும்பத்தை சார்ந்த பலரும் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருப்பதாகவும், அது ஒரு குடும்ப கட்சி என்றும் அதிமுக தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறது. 

இருப்பினும், திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது பெரிதாக விமர்சனங்கள் வரவில்லை. 50 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருப்பதால் அவருக்கு அந்தத் தகுதி இருக்கிறது என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்தன. ஆனால், திமுக கூட்டங்களில் சமீப காலமாக உதயநிதி தென்படுகிறார். ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதியை உருவாக்க முயற்சி நடப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Advertisement

இந்நிலையில், தி ஹிந்து பத்திரிகைக்கு ஸ்டாலின் அளித்த பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் அரசியல் நுழைவு குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். அதில், “உதயநிதி அரசியலில் நுழையவில்லை. அவர் ஏற்கனவே அரசியலில்தான் இருக்கிறார். ஒருவர் திமுகவில் இருக்கிறார் என்றால் அவருடைய ஒட்டுமொத்த குடும்பமும் திமுகவில்தான் இருக்கும். திமுக வரலாற்றை ஆய்வு செய்தால், தாத்தா முதல் பேரன் வரை அனைவரும் திமுகவில்தான் இருப்பார்கள். திமுக என்பது வாழைமரம் போன்று. வாழையடி வாழையாக திமுக உறுப்பினர்கள் கட்சியில் இருப்பவர்கள் உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். அதனால், ஒரு மகனும், தந்தையும் திமுகவில் இருந்தால், அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை”எனக் கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close