சம்பா சாகுபடிக்கு நீரில்லா‌ததால் விவசாயி தற்கொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சம்பா சாகுபடிக்கு நீரில்லாததால் தற்கொலைக்கு முயன்ற‌ நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி‌ சிகிச்சை பலனின்றி‌ அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.


Advertisement

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தலையா மழை கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்ற விவசாயி ஆறு ஏக்கர் நிலத்தில் குத்தகை சாகுபடி செய்துள்ளார். வெள்ளம் வறட்சி போன்ற காலங்களில் இழப்பை சந்தித்த கடைமடை விவசாயிகள், இந்த ஆண்டு கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக தமிழக கடைமடைக்கு தண்ணீர் வந்து சேரும் என்ற நம்பிக்கையில் சம்பா சாகுபடி பணியை தொடர்ந்து செய்து வந்தனர். மேலும் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது என்ற செய்தி அறிந்த விவசாயி சம்பா சாகுபடி பணிகளை துவங்கி உள்ளார்.


Advertisement

இந்நிலையில் கடைமடைக்கு போதுமான தண்ணீர் வந்து சேராத காரணத்தால் 40 நாட்கள் பயிர் கருதத் தொடங்கியது. போதுமான தண்ணீர் இல்லாததாலும் கருகும் பயிரை கண்ட விவசாயி பூச்சிமருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றார். பின் ஆபத்தான நிலையில் இருந்த ராமமூர்த்தியை மீட்டு திருப்பூண்டி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமமூர்த்தி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். மேலும் விவசாயி ராமமூர்த்தி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement