காவிரி நீர் திறப்பதில் பிரச்னை இருக்காது: குமாரசாமி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கர்நாடகாவில் பருவமழை போதிய அளவு பெய்து வருவதால் தமிழகத்துடனான காவிரி நீர் பங்கீட்டில் எந்த சிரமமும் இருக்காது என அம்மாநில முதலமைச்சர் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.


Advertisement

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த குமாரசுவாமி, சுவாமி தரிசனத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விவசாயிகள் பிரச்னை தீர வேணடும், நாட்டில் போதிய மழை பெய்ய வேண்டும் என பிரார்த்தனை செய்வதற்காக மீனாட்சி அம்மனை தரிசிக்க வந்ததாக தெரிவித்தார். மேலும் கர்நாடகாவில் தற்போது போதிய அளவுக்கு மழை பெய்து வருவதால், தமிழகத்துக்கான காவிரி நீர் திறந்து விடுவதில் எந்த சிரமும் இருக்காது எனக் கூறினார். 

காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டிருப்பதாகவும் தற்போது கபினி அணையிலிருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கர்நாடகாவுக்கு கமல்ஹாசன் வந்தபோது காவிரி நீர் விவகாரம் குறித்தே தம்மிடம் விவாதித்தாகவும், அரசியல் ரீதியாக அவர் எந்த ஆலோசனையிலும் ஈடுபடவில்லை என்றும் குமாரசாமி தெரிவித்தார். மேலும் அண்மையில் வெளியான ரஜினியின் காலா திரைப்படம் உரிய பாதுகாப்புடன் கர்நாடகாவில் திரையிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement