சிரியாவின் மூன்றாவது மிகப் பெரிய நகரமான ஹமாவின் சர்வதேச நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்பட்டது. உள்நாட்டுப் போர் காரணமாக பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சாலை மீண்டும் திறக்கப்பட்டதால் சிரியா மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடிவருகின்றனர்.
இது தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அலிபோ ஆகிய நகரங்களை இணைக்கும் சர்வதேச நெடுஞ்சாலையாகும். இந்த சாலை மூடப்பட்டிருந்த போது ஹமாவிலிருந்து ஹோம்ஸ் பகுதிக்கு சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவு சுற்றி செல்லவேண்டியிருந்த நிலையில் தற்போது 45 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே இருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சாலை திறப்புவிழாவின் போது ஏராளமான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உற்சாகத்துடன் கொடியசைத்து வரவேற்றனர். ஹமாஸ் முதல் ஹோம்ஸ் வரை வர்த்தக போக்குவரத்துக்கு முக்கிய சாலையாக இந்த M5 நெடுஞ்சாலை பயன்படும் என ஹோம்ஸ் மாகாண ஆளுநர் தலால் அர்பராஸி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி
இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை