Advertisement

இந்திய அணியில் சித்தார்த் கவுல், அம்பத்தி ராயுடு !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு நாடுகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ரஹானே, டி20 ஒருநாள் போட்டி அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார்.


Advertisement

ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளராக சிறப்பாக செயல்பட்டு வரும் சித்தார்த் கவுல் டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் சிஎஸ்கே அணியில் சிறப்பாக விளையாடி வரும் அம்பத்தி ராயுடுவை இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இணைக்கப்பட்டுள்ளார்.


Advertisement

ஐயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20, 50 ஓவர் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் விவரம்: விராட் கோலி, தவாண், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சுரேஷ் ரய்னா, மணிஷ் பாண்டி, தோனி, தினேஷ் கார்த்திக், அம்பத்தி ராயுடு, சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement