பசிபிக் கடலில் விழுந்தது சீனாவின் ’டியன்காங்-1’

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சீனாவின் ஆயுள் நிறைவடைந்த டியன்காங்-1 என்ற விண்வெளி நிலையம் விண்ணில் பாதுகாப்பாக எரிக்கப்பட்டு தென் பசிபிக் கடலில் விழவைக்கப்பட்டது. இன்று அதிகாலை இச்செயல்பாடு ‌நடைபெற்றதாக சீன அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. 


Advertisement

கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 29- ஆம் தேதி ‘டியன்காங்-1’ என்ற விண்வெளி நிலையத்தை விண்ணில் நிறுவியது சீனா. இது சீனாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கூடம். 10 மீட்டர் நீளம் மற்றும் 8 டன்கள் எடை கொண்ட இந்த ஆய்வுக்கூடம் தனது பணிகளை 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் முடித்துக்கொண்டது. அதன் ஆயுட்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ‘டியன்காங்-1’ செயலற்று விட்டதாக 2016-ம் ஆண்டு சீனா அறிவித்தது.


Advertisement

இந்த விண்வெளி நிலையத்தின் பாகங்கள், இன்று பூமியில் விழும் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். ஆனால் எங்கு விழும் என்று தெரிவிக்கவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், கடலில்தான் விழும் என ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். அதன்படி, தெற்கு பசிபிக் பகுதியில் ஆய்வுக்கூட பாகங்கள் விழ வைக்கப்பட்டதாக சீன அரசு தொலைக்காட்சித் தெரிவித்துள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement