[X] Close

காவிரி மேலாண்மை வாரியம்.. உச்சநீதிமன்றத்தை நாடுகிறது மத்திய அரசு ?

Subscribe
Cauvery-Management-Board-seeks-Supreme-Court

ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தும் என தெரிகிறது. இது தொடர்பாக கூடுதல் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


Advertisement

மத்திய அரசை பொறுத்தவரை நாடு முழுக்க உள்ள பல்வேறு நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரங்களில் தீர்ப்பாயம் அமைப்பதால் கால விரயம் ஆவதாக கருதுகிறது. அதோடு ஒவ்வொரு பிரச்னைக்கும் தனித்தனி தீர்ப்பாயம் அல்லது வாரியம் என்பது தேவையற்ற ஒன்று என்ற கருத்தும் நிலவுகிறது.

இதனையடுத்தே நிரந்தர நதிநீர் தீர்ப்பாயம் என்ற ஒன்றை மத்திய அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முன்மொழிந்து வருகிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த நீர்வள மேம்பாடு தொடர்பான மாநாட்டிலும் கூட நிரந்த நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற முன்மொழிவுக்கு அழுத்தம் கொடுத்தது மத்திய அரசு


Advertisement

இதனால், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் , நிரந்தர நதிநீர் தீர்ப்பாயம் அல்லது நிரந்தர நதிநீர் பங்கீட்டு வாரியம் என்ற ஒன்றை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கால அவகாசம் வேண்டுமென்றும் கோரி உச்சநீதிமன்றத்தை நாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அமைச்சரவையும் நிரந்தர நதிநீர் தீர்ப்பாயத்துக்கு ஒப்புதல் கொடுத்ததை அடுத்து அந்த மசோதா கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை மீண்டும் தூசி தட்டி நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close